ஆளுநர் இந்த உயர்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்; ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த, குடியரசுத்தலைவருக்கு  அனுப்பிய தனது புகார் கடிதத்தில், ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நமது இந்திய நாடு இறையாண்மை மிக்க மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடு, இதில் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதியாக மாறும் ஒருவர், ஆளுநர் பதவியில் தொடரக்கூடாது. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருவதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது அரசியல் கருத்தையும், சர்ச்சையாக பேசிவருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர் சிபிஐ வேண்டுகோள் கொடுத்ததும் காலதாமதம் செய்துவருவது, அவரின் அரசியல் சார்பையும் ஒருதலைபட்சமானவர் என்பதையும் வெளிக்காட்டுகிறது.

இதனால் உயர்பதவியில் வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்பதை அழுத்தமாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இந்த உயர் பதவியில் நீடிப்பது குறித்த முடிவை எடுப்பது தொடர்பாக குடியரசுத்தலைவரின் முடிவுக்கே விடுகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.