தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு.

இத்தகைய தங்கம் விலையில், பங்குசந்தை ஏற்றம் இறக்கம் காரணமாக, தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் வேலையில், தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது.

(04.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5,285-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.73.10க்கும், கிலோ ரூ.73,100க்கும் விற்கப்படுகிறது.

(03.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.66 குறைந்து, ரூ.5,290-க்கு விற்பனையானது. மேலும், வெள்ளி விலை ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.73.50க்கும், கிலோ ரூ.73,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.