தைப்பூசத் திருவிழா: முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள் இன்று.!

தமிழ் மாதங்களில் தை மாதத்தில், பவுர்ணமி தினத்தன்று வரும் பூசம் நட்சத்திரம் தைப்பூசம் திருவிழாவாக தமிழ் மக்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தைப்பூச திருவிழாவானது உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூசத் திருநாளில் முருகனுக்கு பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று வழிபடுவதும், அலகு குத்தியும் காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம்.

Thaipusam 2023
Thaipusam 2023 [Image Source: Twitter ]

தமிழகத்திலும் பழனியில், திருச்செந்தூர், சுவாமிமலை, மருதமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம்,  உள்ளிட்ட முக்கிய முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா இன்று  கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பக்தர்கள் பல கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்து பாதயாத்திரை ஆகவே முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.

Thaipusam 2023
Thaipusam 2023 [Image Source: Twitter ]

குறிப்பாக பழனி மலையில் கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழா சிறப்பு வாய்ந்தது. அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து பக்தர்கள் குடும்பம் குடும்பமாக ஆண் பெண் பக்தர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுடன் ஒரு குழுவாக பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர்.பழனியில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Kavadi lifting
Kavadi lifting [Image Source: Twitter ]

இதில் முருகன் திருக்கல்யாணம், தேரோட்டம் , தெப்ப தேர்த்திருவிழா, மற்றும் காவடி தூக்குதல் என 10 நாட்களும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதனை காண பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட வருகின்றனர்.

Thaipusam 2023 -
Thaipusam 2023 – [Image Source: Twitter ]

முருகனுக்கு உகந்த இந்த விசேஷ நன்னாளில் தான், புராணங்களின்படி பார்வதி தேவி அசுரர்களை அழிக்க முருகனுக்கு வெல் வழங்கியதாக கூறப்படுகிறது.இந்த தினத்தில் முருகனை வழிபடுவது போல பக்தர்கள் வேலையும் வழிபட்டு முருகனை மனதில் நினைத்து தங்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

Leave a Comment