600 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி… போக்குவரத்துத்துறை வெளியீடு.!

தமிழகத்தில் புதிய 600 பேருந்துகளை வாங்குவதற்கன ஒப்பந்த புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்துக்கான தேவை மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக கூடுதலாக பேருந்துகளை இயக்க வைப்பதற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் மாதம் தமிழக பட்ஜெட் 2023-24இல் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதற்கட்டமாக 600 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத்துறை எடுத்துள்ளது.

600 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 600 புதிய பேருந்துகளில் 150 தாழ்தள பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன.