மணிப்பூர் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவ வேண்டும் – கமல்ஹாசன் கோரிக்கை!

சென்னையில் லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில், மாணவர்களின் கேள்விகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் ஏராளமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் நான் வழங்கிய யோசனை என்ற பரபரப்பு தகவலை பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களுக்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து அவர் பேசுகையில், “வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம் அது வரும்போது வரட்டும்” நாம் அதை தேடகூடாது  என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மணிப்பூர் மாணவர்களுக்கு கல்வியைத் தொடர தமிழ்நாடு உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசுகையில்,  இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சியைத் தொடர தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

இது நல்ல செயல், அப்படியே அமைச்சர் உதயநிதியின் தந்தையிடம் இன்னொரு கோரிக்கை உள்ளது. மணிப்பூரில் விளையாட்டு களம் நடக்கவில்லை போர்க்களம் நடக்கிறது. இதனால், மணிப்பூர் மாணவர்களின் கல்வியைத் தொடர தமிழ்நாடு உதவ வேண்டும். ஏன்னென்றால், கேரளா முதலவர் பினராயி விஜயன் அரசு மணிப்பூர் மாணவர்களுக்கு அதை செய்துள்ளது. இந்நிலையில், திராவிட அரசாக இதை செய்ய வேண்டும் என நேற்று கல்லூரி மாணவர்களிடையே பேசியபோது, மநீம தலைவர் கமல்ஹாசன் இந்த கோரிக்கையை முன்  வைத்தார்.