பிறமொழி தயாரிப்பாளர்களிடம் சென்ற தமிழ் படங்கள்…லிஸ்டில் இணைந்த ரஜினிகாந்த்!!

Tamil Cinema: சமீப காலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி, முன்னணி நடிகர்கள் பலரும் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்திருந்தனர். தற்பொழுது, பிற மொழி தயாரிப்பாளர்களான டோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என அணைத்து மொழி தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

READ MORE – இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ ! கிரேசி ஆஃபர் கொடுத்த அனுபமா!

அந்த தகவலின்படி, விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அஜித் நடிக்கவிருக்கும் ‘AK 63’ படத்தை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. சூர்யா நடிக்கவிருக்கும் ‘கர்ணா’ என்ற பிரம்மாண்ட படத்தை பிரபல இந்தி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

READ MORE – படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்!

தனுஷின் ‘DNS’ படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், சிவகார்த்திகேயனின் ‘SK23’ ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது.  இந்த வரிசையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் இணைந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையான் படத்தில் வரும் நிலையில், இவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

READ MORE –  சைலண்டாக மூவ் பண்ணலாம்…ப்ரோமஷன் பெருசா இருக்கே.! சந்தானம் நடிக்கும் புதுப்பட போஸ்டர்.!

rajini SajidNadiadwala image NGEMovies
இந்த நிலையில், பிரபல பலிவுட் நடிகரும், தயரிப்பாளருமான சஜித் நதியத்வாலா படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.  1992 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளராக இருந்து வரும் சஜித் நதியத்வாலா, ஜீத், ஜுட்வா, ஹர் தில் ஜோ பியார் கரேகா, முஜ்சே ஷாதி கரோகி, ஹேய் பேபி, ஹவுஸ்ஃபுல், அஞ்சனா அன்ஜானி, அஞ்சனா அன்ஜானி, 83 உள்ளிட்ட பல பிரம்மாண்டமான திரைப்படங்களை தனது கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment