சைலண்டாக மூவ் பண்ணலாம்…ப்ரோமஷன் பெருசா இருக்கே.! சந்தானம் நடிக்கும் புதுப்பட போஸ்டர்.!

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். காமெடி நயகனாக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம் நாளடைவில், கதாநாயகனாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு பின், கிக் திரைப்படம் வெளியனாது.

READ MORE –  படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்!

இதில், டிடி ரிட்டன்ஸ் மடப்பெறும் வரவேற்பு பெற்றது, ஆனால் அதற்கு அடுத்ததாக வெளியான கிக் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து, அவரது நடிப்பில் இந்த ஆண்டு பிப்-2ம் தேதி வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் ஆவரேஜ் ஆன வெற்றியை பெற்று தந்தது.இந்த நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தையடுத்து கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்துள்ளார் சந்தானம்.

READ MORE – திரையரங்கில் மிஸ் பண்ணிட்டீங்களா? ஓடிடிக்கு வருகிறது ‘டெவில்’!

சத்தமே இல்லாமல், நடைபெற்று வந்த இந்த படத்துக்கு ப்ரோமஷன் பலமாக இருக்கும் வகையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன், தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு “இங்க நான் தான் கிங்கு” என பெயரிட்டுள்ளனர். கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Inga Naan Thaan Kingu
Inga Naan Thaan Kingu [Image – @iamsanthanam]
நடிகையாக அறிமுக நடிகை பிரியாலயா சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். குறிப்பாக, மறைந்த நடிகர் மனோபாலாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

READ MORE – தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, எம் தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கான வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

Leave a Comment