அறிய வாய்ப்பு! சினிமாவில் நடிக்க ஆர்வமா? சூர்யா நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள், நடிகைள் நடிப்பின் மீது ஆர்வம் இருந்த காரணத்தால் ஆரம்ப காலத்தில் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் எல்லாம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் திறமைகளை வைத்துக்கொண்டு திணறி கஷ்ட்டப்பட்டு சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களை போலவே, மக்கள் பலரும் நடிப்பு திறமைகளை வைத்துக்கொண்டு பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா அதன் மூலம் நம்மளுடைய திறமையை வெளிக்காட்டலாம் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறது

முதல் முத்தத்திற்கு 10 மார்க்! அதுதான் அடுத்த கிஸ்-க்கு உதவுச்சு..நடிகை ரேஷ்மா ஓபன் டாக்!

அது என்னவென்றால், தங்களுடைய தயாரிப்பில் உருவாகும்  புது படத்தில் மதுரையில் இருப்பவர்களில்  நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், என நேர்முக தேர்வுக்கு வந்து கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.  இந்த திரைப்படம் 2டி நிறுவனத்தின் 20-வது திரைப்படமாக உருவாகிறது.

சூர்யா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஆர்வம் மற்றும் நீங்கள் மதுரையில் உள்ளவர்கள் என்றால் ‘அமோகா சர்வீஸ் அபார்ட்மெண்ட், SS காலனி, பாலாஜி கேஸ் ஏஜென்ஸி அருகில், மதுரை – 16 இடத்திற்கு செல்லலலாம். அங்கு தான் வரும் நவம்பர் 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறவிருக்கிறது.

இதில் கலந்து கொள்ள இளைஞர்களுக்கு (18 வயது முதல் 28) வயது வரை இருக்கலாம். பெரியவர்கள் (30 வயது முதல் 70) வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த திரைப்படம் படத்தை எந்த இயக்குனர் இயக்கிறார் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CASTING CALL ALERT
CASTING CALL ALERT 2D ENTPVTLTD
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.