Bar: விதிகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக, சுரேஷ்பாபு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சுரேஷ்பாபு தொடர்ந்த வழக்கில், தனியார் ஹோட்டல்கள், கிளப்புகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசுக்கு புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செயப்பட்டது.

அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல்நேரம் இயங்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கலால்துறை, காவல்துறை, வருவாய்துறையினர் அடங்கிய குழு அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் சோதனைகளை மூலம் திடீர் நடத்தவேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.