அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்த நிக்சன்! எச்சரிக்கை விடுத்த நடிகை ஸ்ரீ பிரியா!

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்த நிக்சன்! எச்சரிக்கை விடுத்த நடிகை ஸ்ரீ பிரியா!

sri priya about nixen archana fight

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் சக போட்டியாளரான அர்ச்சனாவை பற்றி விமர்சித்து பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயம் “அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார்  என்பது போல முதலில் அர்ச்சனா நிக்சனை பார்த்து கேட்டார்.

அதற்கு கடுப்பான நிக்சன் “நீ இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க சரியான ஆள் இல்லை கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இரு. அதற்கு அர்ச்சனா போடா என்று கூற நீ மூடு நீ வாயை மூடு என்று நிக்சன் கூறினார். மீண்டும் அர்ச்சனா டேய் போடா மரியாதையாக பேசு என்று கூறினார். உனக்கு எதற்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பது போலவும் நிக்சன் பேசினார்.

கருமம்! நீ எல்லாம் ஒரு பொண்ணா? அர்ச்சனாவை அந்த மாதிரி பேசிய நிக்சன்!

பிறகு வாக்கு வாதம் பெரிதாக வெடித்த நிலையில், வீட்டில் இருந்த விஷ்னு நிக்சனை அழைத்து வெளியே  கொண்டு சென்றார். வெளியே சென்ற பிறகும் அடங்காத நிக்சன் கத்தி கொண்டே இருந்தார். அப்போது அர்ச்சனா முகத்தை வைத்து அது மூஞ்சியை பார் கருமம் கருமம் என்று கூறிவிட்டு சொருகிடுவேன்” என்பது போலவும் பேசியிருந்தார். சொருகிடுவேன் என்றால் கொலை மிரட்டலுக்கு சமம்.

ஒரு பெண்ணை பார்த்து இப்படியா பேசுவீங்க? என்பது போல தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த நடிகை ஸ்ரீ பிரியா தற்போது நிக்சன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் தவறு இப்படி பேசுவதை நிறுத்தவேண்டும் என்பது போல எச்சரித்துள்ளார்.

sripriya about nixen
sripriya about nixen [FILE IMAGE]
இது குறித்து ஸ்ரீ பிரியா தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கூறியுள்ளார். மேலும் நிக்சன் அர்ச்சனாவை தொடர்ந்து இன்று தினேஷிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக இப்படி சர்ச்சைகளில் நிக்சன் சிக்கி வருவதால் அவர் வீட்டை விட்டு கிளம்பும் நேரம் வந்துவிட்டது எனவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Join our channel google news Youtube