கருமம்! நீ எல்லாம் ஒரு பொண்ணா? அர்ச்சனாவை அந்த மாதிரி பேசிய நிக்சன்!

கருமம்! நீ எல்லாம் ஒரு பொண்ணா? அர்ச்சனாவை அந்த மாதிரி பேசிய நிக்சன்!

Nixen

பிக் பிக் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டைகள் பெரிதாக வெடித்து கொண்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே வாக்கு வாதம் பெரிதாக வெடித்துள்ளது. இன்று அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் கிளம்பியுள்ளது.

அப்போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார் என்று நிக்சனை பார்த்து கூறினார். அதற்கு ‘நீ இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க சரியான ஆள் இல்லை என்று அர்ச்சனாவை பார்த்து நிக்சன் கூறுகிறார். அதற்கு பதில் அளித்த அர்ச்சனா நீ வீட்டிற்குள் இருக்கும்போதே வினுஷா பற்றி பேசிய விஷயம் எனக்கு தெரியும் என்று கூறினார். அதற்கு அதையெல்லாம் பற்றி நீங்க தேவை இல்லாமல் இப்போது பேசாதீர்கள் என்று நிக்சன் கூறினார்.

பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

பின் சற்று அசால்ட்டாக அர்ச்சனா பேசிக்கொண்டு எனக்கு தெரியும்… எனக்கு தெரியும்… என்பது போல கூறினார்.  இதனால் கடுப்பான நிக்சன் திரும்ப திரும்ப அதை பற்றி பேசாத  என்று கூறுகிறார். அதற்கு அர்ச்சனா போடா என்று கூற நீ மூடு நீ வாயை மூடு என்று நிக்சன் கூறினார். மீண்டும் அர்ச்சனா டேய் போடா மரியாதையாக பேசு என்று கூறினார்.

அதன் பின், போக முடியாது உன்னால் என்ன பண்ண முடியும் என்ன பண்ணுவ? என்று சண்டையில் ஈடுபட்டார்.  பிறகு அங்கு இருந்த விஜய் வர்மா சண்டை பெரிதாக வெடிக்க தொடங்கியவுடன் நிக்சனை அழைத்து கொண்டு வெளியே சென்றார். வெளியே செல்லும்போதும் கூட நிக்சன் நீ இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என்பது போல அர்ச்சனாவை பார்த்து  கூறினார். வெளியே சென்றபிறகும் இந்த பிரச்சனையை விடாமல் அர்ச்சனா முகத்தை வைத்தும் சொருகிவிடுவேன் என்பதுபோலவும் நிக்சன் பேசியுள்ளார்.

ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றபட்டார். அவரை தொடர்ந்து தற்போது சக போட்டியாளரை பார்த்து நிக்சன் இப்படி மூடு என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Join our channel google news Youtube