பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

yugendran bigg boss

தமிழ் சினிமாவில் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கி கொண்டு வருபவர் யுகேந்திரன். தோழ தோழ,அடிடா நையாண்டிய, கலயாணம்தான் கட்டி, முல்லை பூ, நெஞ்சத்தை கில்லாதே, போட்டாலே கடைல உள்ளிட்ட பல பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமான இவர் பூவெல்லாம் உன் வாசம், இளைஞர், பகவதி, மதுரே, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.

பிறகு படங்களில் நடிக்கவும் பாடல்களை படவும் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு  சில வாரங்கள் வீட்டிற்குள் நன்றாக விளையாடி வந்தார் . பிறகு நாமினேஷன் லிஸ்டில்  இடம்பெற்று ஒரு சில வாரங்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பிறகு அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தான். ஆரம்பக் காலகட்டத்தில் இவர் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இப்போது விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் வேறு மாதிரியான மார்க்கெட்.  எனவே இப்போது அவர் விஜய்யுடன்  ஒரு படத்தில் நடித்தால்  அடுத்ததாக கண்டிப்பாகவே அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

கண்ணீரும் காயங்களும் உண்மை தான்! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வேதனை!

எனவே தற்போது யுகேந்திரன் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தில் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம். இவர் கடைசியாக விஜய்யுடன் இணைந்து திருப்பாச்சி திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து 18-ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த தளபதி 68 திரைப்படத்தில் சினேகா, ஜெயராம், லைலா, மோகன், யோகி பாபு, பிரபுதேவா, பிரேம்கி அமரன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube