அடுத்த 1000 கோடி லோடிங்…வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ ட்ரெய்லர்!

அடுத்த 1000 கோடி லோடிங்…வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ ட்ரெய்லர்!

Dunki Drop

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக்கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் திரைப்படமும் 1,100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக ஷாருக்கானின் படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருவது பாலிவுட் திரையுலகத்தை மிரள வைத்துள்ளது. இப்போது, அவரது நடிப்பில் உருவாகியுள்ள டன்கி திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்போது, டன்கி திரைப்படட் ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஹிந்தி மொழிக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படம் போல தெரிகிறது. இருப்பினும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது போல இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

சவால்கள் மற்றும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்கள் நிறைந்த வெளிநாடுகளுக்கு ஒரு அசாதாரண பயணத்தை தொடங்கும் நான்கு நண்பர்களை பற்றிய கதையை இந்த ட்ரைலர் விவரிக்கிறது.

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி  என்பவருடைய இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

அதன்படி, இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது திரைப்படம் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே, இந்த ஆண்டு அவரது நடிப்பில்  இரண்டு படங்கள் 1000 கோடி வசூல் செய்த நிலையில், மூன்றாவது திரைப்படமான டன்கி படமும் அந்த சாதனை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube