எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

ameer and suriya

பருத்திவீரன் படம் இந்த அளவிற்கு பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று தெரியாமல் அமீர் பற்றி ஞானவேல் ராஜா பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், மௌனம் பேசியதே படத்தில் இருந்தே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கு இடையே பிரச்சனை இருப்பதாக செய்திகள் உலாவி கொண்டு இருந்தது.

ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமீர் ” எனக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை நான் அவருடன் சேர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளேன். வாடிவாசல் படத்தில் நடிக்க வெற்றிமாறன் ஒரு ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் பேசினார்.

ஒரு முறை எனக்கு போன் செய்து வாடிவாசல் படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் இருக்கு நீங்கள் நடிக்கிறீர்களா? சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எதுவும் பிரச்னையா? என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் எனக்கும் சூர்யாவுக்கும் இடையே ஒரு பிரச்சனை இல்லை. எனக்கு அவர் நல்ல நண்பர் நல்ல சகோதரர் என்று கூறினேன். அதற்கு வெற்றிமாறன் நேரில் வந்து என்னிடம் கதை சொன்னார்.

கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட அமீர்! காரணம் என்ன தெரியுமா?

எனக்கும் சூர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு குறிப்பாக நந்தா பட சமயத்தில் இருந்தே எனக்கும் அவருக்கும் பழக்கம் உண்டு. எனவே, நானும் அவரும் எல்லாம் அதிகமாக நேரம் செலவழித்தது உண்டு. அடிக்கடி நாங்கள் இருவரும் இணைந்து அவருடைய காரிலே கொடைக்கானல் போவோம்.

ஒரு முறை இரவு எனக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது அந்த சமயம் அவர் ஸ்ரீ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். ரமணா மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். மருத்துவமனையில் இருந்து என்னை விடவே இல்லை பிறகு சூர்யாவுக்கு தான் போன் செய்து அழைத்தேன். அவர் தான் பேசி மருத்துவமனையில் இருந்து என்னை வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த மாதிரி எங்களுக்குள் மறக்க முடியாத பல நினைவுகள் இருக்கிறது” எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இதைப்போலவே, நடிகர் சூர்யா கார்த்தி25 படத்தின் விழாவில் கலந்துகொண்ட போது ” என்னுடைய தம்பிக்கு பருத்திவீரன் எனும் யாராலும் மறக்க முடியாத படத்தை கொடுத்த அமீர் அண்ணாவுக்கு நன்றி ” என தெரிவித்து இருந்தார். எனவே, இதனை வைத்து பார்க்கையில், இவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Join our channel google news Youtube