போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது…ஞானவேலை விளாசிய சசிகுமார்.!

பயணங்கள் முடிவதில்லை மாதிரி பஞ்சாயத்துக்கள் முடிவதில்லை போலயே, பருத்திவீரன் விவகாரத்தில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இயக்குனர் சசிகுமார் சில கேள்விகளை ஏழுப்பியுள்ளார்.

அதாவது, பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த 17-ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசிய சர்ச்சை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இது குறித்து ஞானவேல் ராஜா பேசுகையில், பருத்திவீரன் படத்தில் அமீர் அதிகமாக கணக்கு காட்டி என்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும். ஆனால், அவர் அதனை திருடி சம்பாதிக்கிறார் என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

பிறகு ஞானவேல் ராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு அமீர் உண்மை என்னவென்று அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இப்படி நீண்டு கொண்டே சென்ற பருத்திவீரன் தொடர்பான பிரச்னைக்கு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்று  முற்றுப்புள்ளி வைத்து, அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததார்.

இதனையடுத்து, போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா

இதுதொடர்பாக ஞானவேல் ராஜா வெளியிட்ட அறிக்கையில், “என்றைக்குமே நான் அவரை ‘அமீர் அண்ணா’ என்று தான் குறிப்பிடுவேன். ஆனால் அவர் என் மீது சுமத்திய பொய் குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தியது. நான் பேசிய சில வார்த்தைகள், அவரை புண்படுத்தியிருந்தால் நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

சிவகுமார் கண்டிக்க மாட்டாரா? ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்கணும் – கரு. பழனியப்பன் காட்டம்!

விளாசிய சசிகுமார்

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் சசிகுமார் கேள்வி எழுப்பி அறிக்கை வெளிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? ‘நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன?

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை.!

திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? என அடுக்கு அடுக்காய் கேள்விகளை முன் வைத்து ஞானவேல் ராஜாவை சசிகுமார் விளாசி உள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.