பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் கடந்த 17-ஆண்டுகளாக பேசிக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

அந்த பேட்டியில் பேசிய ஞானவேல் ” பருத்திவீரன் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அமீர் அதிகமாக கணக்கு காட்டி என்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும். ஆனால், அவர் அதனை திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். பிறகு இது பற்றி அமீரும் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

அந்த அறிக்கையில் அமீர் ” ஞானவேல் ராஜா சொல்லும் விஷயத்தில் கொஞ்சம் கூட உண்மை என்பது இல்லை அவர் என்னுடைய பெயரை கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி பேசிகொன்டு வருகிறார்” என கூறியிருந்தார். அமீர் அறிக்கையை வெளியிட்ட பிறகு இவருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாரதி ராஜா என அனைவரும் ஞானவேல் பேச்சுக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியீட்டினர்.

இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில், கரு.பழனியப்பன், பாரதி ராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் அமீரிடம் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து, தான் பேசியது அமீரை காயப்படுத்தி இருந்தது என்றால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என கூறியுள்ளார்.

Gnanavelraja
Gnanavelraja Studio Green
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.