ஆர்.எஸ்.எஸ் பேரணி… காவல்துறை கெடுபிடி…தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எச்.ராஜா .!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு  கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் பேரணி

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது.ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், 12 கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் ஊர்வலத்தின்போது மற்ற மதங்களைப் பற்றி, சாதிகளைப் பற்றி அவதூறாக பேசுவதோ அல்லது பாடல் பாடவோ கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எச். ராஜா கண்டனம்

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு  கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ” இன்று திருச்சிபில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கொடி கட்டக்கூடாது என்று காவல்துறை கெடுபிடி அராஜகம். தடை செய்யப்பட்ட தேசவிரோத PFI மற்றும் அதன் கூட்டாளிகள் குறித்து பேசக்கூடாதாம் DGP கறார். தமிழக அரசு மற்றும் காவல் துறையின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது.” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment