காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்…வெளியானது திருமணப் புகைப்படங்கள்.!

கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலரான நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை நேற்று திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

Rakul Preet Singh -Jackky Bhagnani

சீக்கிய மற்றும் இந்து முறைப்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பசுமை திருமணமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு கொண்டாட்டத்தில், பல்வேறு பாலிவுட் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.  தற்போது, இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Rakul Preet Singh -Jackky Bhagnani

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘இப்போது மட்டுமல்ல எப்போதும் என் காதல்’ என புகைப்பட ஆல்பத்தை பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முத்தக்காட்சி எல்லாம் இருக்கு! அனுபமா கேட்ட அதிர வைக்கும் சம்பளம்?

Rakul Preet Singh -Jackky Bhagnani

ரகுல் ப்ரீத் சிங் தான் காதலிப்பதை கடந்த 2021 -ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவித்தார். அதன்பிறகு காதலனுடன் சுற்றுலா சென்றுகொண்டு வந்த இவர் சினிமா கேரியர் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு தன் காதலனை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டில் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment