குடும்பத்துடன் குஷி! காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா…வைரலாகும் புகைப்படங்கள்!

தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் நடிகை நயன்தாரா அதனை தனது குடும்பத்துடன் கொண்டாடி அதற்கான புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் ஜாலியாக கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில புகைப்படத்தில் நயன்தாரா தனது குழந்தைகளுடன் விளையாடுகிறார்.

தேதி எல்லாம் இல்ல! சிவகார்த்திகேயன் படத்தை உதறி தள்ளிய மிருணாள் தாக்கூர்!

ஒரு சில புகைப்படங்களில் தனது ஆசை கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரொமாண்டிக் போஸ் கொடுத்துள்ளார். புகைப்படங்களை வெளியீட்டு நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள் அறிந்ததை விட நான் உன்னை நேசிக்கிறேன், நான் சொல்ல முடியாததை விட, ஆனால் தினமும் உங்களுக்குக் காட்டுவேன் என்று நம்புகிறேன் என் என்றும் காதலர் தின வாழ்த்துக்கள் 10 வருட தூய அன்பு மற்றும் ஆசிகள்” என்று கூறியுள்ளார்.

அதைப்போலவே, இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” காதலில் நம்பிக்கை கொண்ட உங்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்நீ என் உயிர் என்பதிலிருந்து நான் உன் உலகம், இப்போது உயிர் & உலகம் நீ & நான் ஆகியிருக்கிறது! எங்கள் முதுமையிலும், இனி வரும் பிறவிகளிலும் ரசிக்க பல தருணங்களுடன் நீண்ட தூரம் வந்ததற்கு பாக்கியம், உன்னை நேசிக்கிறேன் மிகவும் உயிர்” என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment