அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள்… 10இல் 9 பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறதாம்.!

Family Responsibilities [FileImage]

குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போது 10 இல் 9 பேருக்கு தங்கள் வேலையில் முன்னேற படிப்பதற்கு கடினமாக அமைந்துள்ளது என ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் நிரந்தர பணி என்பது அரிதாகிவிட்டது. ஒரு பணியில் இருந்து கொண்டு, அந்த பணி சூழலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நகர்வுக்கு புதியதாக கற்றுக்கொள்வது இன்றியமையானதாக மாறி வருகிறது. இதனை புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல புதியதாக கற்றுக்கொள்பவர்கள் முன்னேற்றமடைந்து செலகின்றனர். ஆனால் பணிக்கு செல்லும் பெரும்பாலான ஆண்களுக்கு பணிச்சுமையை காட்டிலும் குடும்ப பொறுப்புகள் என்பது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் புதியதாக கற்றல் கூட கடினமானதாக மாறி வருகிறது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் புதியாக கற்றல் குறித்த பிரபல தளமான லிங்க்டு இன் (LinkedIn) பணியில் வேலை செய்பவர்கள் மத்தியில் ஓர் ஆய்வை நடத்தி, அதில் இருந்து பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 10இல் 9 பேர் தங்கள் பணி நிமித்தமாக புதியதாக கற்று கொள்வதில் சிரமம் மேற்கொள்வதாகவும், அதற்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக அமைகிறது என  LinkedIn Career மூத்த நிர்வாக அதிகாரி நிரஜிதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 28 சதவீதம் பேர் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை பெறுகின்றனர். அல்லது வழங்குகின்றனர். என்றும், 27 சதவீதம் பேர் புதிய தொழில் வாய்ப்புகளை தேடுகின்றனர் என்றும், 26 சதவீதம் பேர் சக தொழிலாளர்களிடையே தங்கள் அறிவை பகிர்ந்து கொள்கின்றனர் என்றும் அறியப்பட்டுள்ளது.

மேலும், LinkedIn தரவுகளின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒரு வேலைக்கு தேவையான திறன்கள் 64 சதவிகிதம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொழிலாளர்கள் கற்றலில் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையானதாக மாறுகிறது. என்றும் நிரஜிதா பானர்ஜி கூறினார்.