புதிய மின்சாரக் கொள்கை… மின்கட்டணத்தை குறைக்கும் முயற்சி… தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.!

புதிய மின்சாரக் கொள்கையால், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார பயன்பட்டுக்கொள்கை, மக்களின் மின்கட்டணத்தை பெருமளவில் குறைக்க உதவும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, புதிதாக கொண்டுவந்துள்ள மின்சாரக்கொள்கை, மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமாக இருக்கப்போகிறது.

மேலும் இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. புதிய மின்சாரக்கொள்கை மூலம், பகல் நேரங்களில் மின்பயன்பாடு குறைக்கப்பட்டு இரவு நேரங்களில் அதனை பகிர்ந்து சரியாக பயன்படுத்தினால் இது மக்களுக்கான நன்மை அளிக்கும் திட்டம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மாற்று எரிசக்திகளை பயன்படுத்த ஊக்கப்படுத்துவதாகவே இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலங்களில் மின்தேவை அதிகமாக இருக்கும் என்பதால் அதை சரிசெய்யவும், மக்களுக்கு மின்கட்டணத்தை குறைக்கும் வகையிலும் புதிய மின்சாரக்கொள்கையை அரசு கொண்டுவந்துள்ளது, இதன் நன்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.