மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு இழப்பு…அடுத்தடுத்த மடிந்த ஹிட் திரைப்படங்கள்.!

மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு இழப்பு…அடுத்தடுத்த மடிந்த ஹிட் திரைப்படங்கள்.!

Annapoorani - Nayanthara

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ம் தேதி) நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், பிக்பாஸ் தர்ஷன் நடித்த நாடு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான மூன்று நாட்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும் இல்லாமல், பாசிட்டிவ் விமர்சங்களை பெற்றது.

இந்த மூன்று படத்தின் கதைகளும் நன்றாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த மூன்று படங்கள் உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் சென்னை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனால், இந்த மூன்று படங்களும் வசூலில் தத்தளிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆம், தமிழ்நாட்டில் அணைத்து திரையரங்குளிலும் படம் வெளிவந்தாலும், சென்னை போல் முக்கிய மாவட்டங்களில் இவ்வாறு மழை – வெள்ளம் ஏற்பட்டதால், இந்த மூன்று படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

இதில், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. முதல் நாளில் 1.5 கோடி வசூலித்தது, இதில் நயன்தாராவுக்கு சம்பளம் மட்டும் 10 கோடி என்று சொல்லப்படுகிறது. இதனால், படத்தின் பட்ஜெட் கூட வசூலில் எடுக்க முடியாது போல் தெரிகிறது. இது நயன்தாராவுக்கு அடுத்த இழப்பாக பார்க்கப்படுகிறது. இனிமேல் வரும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் குறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அன்னபூரணி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75வது படமான “அன்னபூரணி” அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அசைவம் செய்து அசத்தினாரா நயன்தாரா? அன்னபூரணி விமர்சனம்…

பார்க்கிங்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

நாடு

இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். மேலும், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘நாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ள சரவணன் இயக்கியுள்ளார். ஸ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரிக்க., சத்யா இசையமைக், சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Join our channel google news Youtube