தமன்னா உடன் டூயட் பாடிய ஆரவ் : கலாய்த்த ஹரிஸ் கல்யாண்

நடிகை ஓவி யாவின் காதலை ஆரவ் நிராகரித்தது தான் அவர் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது. தனக்கு ரசிகர்களின் பலமான ஆதரவு இருந்தும், ஓவியா வெளியேறினார்.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஜோடியாக பிரிந்து, இருவருக்கும் நடுவில் உள்ள கயிறை தனியாக பிரிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது முடியும் வரை அவர்கள் அனைத்து பணிகளையும் ஒன்றாகவே செய்யவேண்டும் என கூறப்பட்டது.
ஆரவ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஜோடியாக பிரிந்தனர். கொஞ்ச நேரம் கழித்து ஹரிஷ் பாத்ரூம் சென்றபோது ஆரவ் வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது பாத்ரூம் கதவில் இருந்த தமன்னா புகைப்படத்தை பார்த்து பாட ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் வெளியில் வந்த ஹாரிஸ், ‘என்ன தமன்னாவுடன் டூயட் டா?” என கேட்டு ஆராவ்வை கலாய்த்துவிட்டார்.

Leave a Comment