கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

Lover

ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில்  ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தை முன்னதாக பார்த்த பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்  படத்தை பாராட்டி தனது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பே படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிவந்தனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கூட படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

தேசிங் பெரியசாமி

படத்தை பார்த்துவிட்டு பிரபல இயக்குனரான தேசிங் பெரியசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “நன்றாக எழுதப்பட்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட லவ்வர் திரைப்படத்தினை நான் பார்த்தேன். மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க, பார்க்க புதுவிதமாக இருந்தது. நிச்சயமாக ஷாட் ஹிட்…வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *