மணிகண்டனுக்கு அடுத்த ஹிட் ரெடி! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட்நைட்’ திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்ததாக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அடேங்கப்பா! ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள் 

இந்த திரைப்படம் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துள்ள விநியோகஸ்தர் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். படத்தை பார்த்துள்ள அவர் ”  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” லவ்வர் படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன்.

படத்தில் அவ்வளவு அழகான காதல் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இன்றயை காலத்து இளைஞர்களை இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கிற்கு இழுக்கும்.  மணிகண்டனின் அசாதாரணமான நடிப்பு ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்க தூண்டுகிறது. சீன் ரோல்டன் ஆத்மார்த்தமான இசை. என்னுடைய வார்த்தைகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக லவ்வர் படம் பிளாக் பஸ்டர்” எனவும் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment