25 கோடிக்கு மல்லுக்கட்டிய கமல்ஹாசன்…தலைசாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!

25 கோடிக்கு மல்லுக்கட்டிய கமல்ஹாசன்…தலைசாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளாதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முழுக்க, முழுக்க ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் இந்த படம் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பான படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்பொழுது, படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்பொது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பட்ஜெட் படக்குழு முடிவு செய்ததை விட தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், இந்த படத்தை சோனி தயாரிப்பு நிறுவனமும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தான் தயாரித்து வருகிறது.

இப்பொது, படத்தின் பட்ஜெட்டை விட ரூ.25 கோடி தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கமல் தரப்பு சோனி நிறுவனத்தை நாடியாக சொல்லப்படுகிறது. சோனி நிறுவனத்திடம் அந்த 25 கோடியை கேட்டதாகவும், அதற்கு சோனி நிறுவனம் கடைசிவரை ஒத்துவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதலில் படத்தை தயாரிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் போடுவது வழக்கம். அவ்வாறு, ஒரு முறை இத்தனை கோடி பட்ஜெட் என்று ஒப்பந்தம் செய்த பிறகு, ஒப்பந்தத்தை மீறி பணம் செலவாகிறது என்றால், அதற்கு கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க்காது. இதனால், கமல் தரப்பு இயக்குனர் மற்றும் நடிகரின் சம்பளத்தை குறைத்து கொண்டால் மட்டுமே ஈடு செய்ய முடியும் என கமல் தரப்பு முடிவு செய்து வருவதாக சினிமா செய்திகள் வழங்கும் வலைப்பேச்சு கூறுகிறது.

சினிமாபிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அயலான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube