பிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

பிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

chiyaan vikram

நடிகர் விக்ரம் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார். தற்போது அவர் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் சித்தா படத்தின் இயக்குனரான அருன் குமார் இயக்கத்தில் தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக விக்ரம் யாருடைய இயக்கத்தில் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், அவர் அடுத்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தான் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான கோப்ரா படம் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது.

இப்படி பட்ட தோல்வி படம் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு மீண்டும் தன்னை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை விக்ரம் கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் கூடுதலான ஒரு தகவல் என்னவென்றால், இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ள இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட கோப்ரா படத்தின் சாயலிலே இருக்குமாம்.

பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

அதே சாயலில் தான் இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய போகிறார்களாம். இயக்குனர்  அஜய் ஞானமுத்து தற்போது டிமாண்டி காலாணி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதைப்போல விக்ரம் தற்போது தன்னுடைய 62-வது படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கமிட் ஆகி இருக்கும் படத்தை முடித்த பிறகு இணைந்து படம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

விரைவில் அஜய் ஞானமுத்து விக்ரம் இணையவுள்ள சியான் 63 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட ஆண்டுகளாக பண பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. விரைவில் அந்த திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube