முத்து vs ஆளவந்தான்: வசூலில் ரஜினியை முந்திய கமல்.!

கமலின் ஆளவந்தான், ரஜினியின் முத்து படங்கள் டிசம்பர் 8ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 8 ஆம் தேதி) பாக்ஸ் ஆபிஸில் மோதினர். இதற்கு முன் 2005ம் ஆண்டில் ‘சந்திரமுகி’ மற்றும் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

2 பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள், ஹவுஸ் ஃபுல் ஆகும் அளவுக்கு தியேட்டருக்கு படையெடுத்தனர். தற்பொழுது, முத்து மற்றும் ஆளவந்தான் படத்தின் மறு வெளியீட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில், ஆளவந்தான் ரூ.15 லட்சம், முத்து படம் ரூ.7 லட்சம் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளவந்தான் திரைப்படம் சொந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், முத்து படத்தை விட, அதிக அளவில் வசூல் சாதனை படைக்கும். அதற்கு காரணம் ஆளவந்தான் படம் சுமார் 1000 திரையரங்குகளில் ரீ ரிலீசாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள்?

மறுவெளியீட்டு முதல் நாளில் அமோக வரவேற்பைப் பெற்றாலும், முத்து படம் வசூலில் சற்று பின்தங்கியவாறு உள்ளது. முன்னதாக, ஜப்பானிலும் இப்படம் ரசிகர்களை கவர்ந்து, ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற பெயரை பெற்றது.

முத்து

1995 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘முத்து’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஆல் டைம் பிளாக்பஸ்டராக மாறியது. இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதா ரவி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

1000 திரையரங்குகளில் வெளியாகும் ஆளவந்தான்! எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்…

ஆளவந்தான்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஆளவந்தான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி இருப்பார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.