1000 திரையரங்குகளில் வெளியாகும் ஆளவந்தான்! எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்…

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘ஆளவந்தான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும். அதில் ஒன்றுதான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படம்.

அந்த சமயம் இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக லாபத்தை ஈட்ட வில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு ஹிட்டானது. இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஆம், இப்படம் டிசம்பர் 8ஆம் தேதி புதுப்பொலிவுடன் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ பாடல் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் கமல் ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத் பாபு, கொல்லப்புடி மாருதி ராவ், மதுரை ஜி.எஸ்.மணி, மிலிந்த் குணாஜி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

வெல்லுவான் புகழ் அள்ளுவான்…அகிலமெங்கும் ‘1000’ திரையரங்கில் வெளியாகும் ‘ஆளவந்தான்’.!

ரீ ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மெருகேற்றப்பட்ட ஆளவந்தான் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலரில் வரும் கமலின் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி உள்ளனர். முந்தைய கலர் கொலிட்டி, சவுண்ட்ஸ் போன்ற தொழில்நுட்ப வேலைகள் சரிபார்க்கப்பட்டு தரமாக வந்திருக்கிறது. பெரிய ஸ்கிரீன்களில் பார்க்கும் போது கூடுதல் எஃபெக்ட் கிடைக்கும்.

முன்னதாக, நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது விருமாண்டி திரைப்படம் மீண்டும் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுபோல் ஆளவந்தான் படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் சொன்னதை காது கொடுத்து கேட்காத தாணு! கடைசியில் பிளாப் ஆன ஆளவந்தான்!

ரஜினி – கமல் மொதல்

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர். டிசம்பர் 8ம் தேதி ரஜினிகாந்தின் ‘முத்து’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.