பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

ameer gnanavel raja sivakumar

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ” பருத்திவீரன் பட சமயத்தின் போது அமீர் கணக்கு விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார். படத்திற்கு சொன்ன கணக்கை விட அதிகமாக செலவு செய்து பணத்தை திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் ‘ என்று  விமர்சித்து பேசி இருந்தார்.

பேட்டியில் ஒரு இயக்குனரை பற்றி இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது பற்றி இயக்குனர் அமீரும் ” அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. என்னுடைய பெயரை கெடுக்கும் வகையில் அவர் என்னை பற்றி இப்படி பேசி இருக்கிறார்.  என்னை பற்றி அவர் இப்படி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்” என கூறியிருந்தார்.

அமீர் பேச தொடங்கிய பிறகு இந்த விவகாரம் இன்னுமே பெரிய அளவில் பிரச்சனை தலைப்பு செய்தியாக மாறியது. எனவே, ஞானவேல் ராஜா பேசியதற்கு சசிகுமார், பொன்வண்ணன், சினேகன், பாரதி ராஜா, கரு.பழனியப்பன் என பலரும் கண்டனத்தை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக கரு.பழனியப்பன் இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, திரு சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன?  18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா?நூறு குறள்கள் படித்த சிவக்குமார் “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளையும் படித்து இருப்பார். வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் பற்றி ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில் “பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து இருந்தார்.

சமரசம் செய்த நேரத்தில் மீண்டும் தூண்டிவிட்ட சசிகுமார்… ட்ரெண்டாகும் பருத்திவீரன்.!

ஆனால், அவரை மன்னிப்பு கேட்க சொன்னதே சிவகுமார் தானாம். நேற்று இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், உடனடியாக ஞானவேல் ராஜாவை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் உடனடியாக வைங்கள் என்று கேட்டுக்கொண்டாராம். அவர் கூறிய பிறகு தான் ஞானவேல் ராஜா வருத்தமும் தெரிவித்தாராம். இந்த தகவலை பிரபல சினிமா செய்திகள் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஞானவேல் ராஜா அமீரை திருடன் என்று விமர்சித்து பேசுவதற்கு முன்பு அமீர் “எனக்கு எதிராக ஞானவேல் ராஜா தரப்பில் பலரும் இருந்தார்கள்” என்று கூறியிருந்தார். அதற்கு தான் ஞானவேல் ராஜா பேட்டியில் இந்த விவகாரம் பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” அமீர் அவுங்க தப்பானவங்க இவுங்க தப்பானவங்க என்று கூறினார். நான் இந்த விஷயத்தை பற்றி சிவகுமார் ஐயாவிடம் பேசினேன் ஐயா என்னை பற்றி உங்களை பற்றி எல்லாம் பேசி இருக்கிறார் இதற்கு பதில் அளிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என கூறினேன். அதற்கு சிவக்குமார் நீ உண்ணை நல்லவன் என்று சொன்னாலும், அமீர் அவனை நல்லவன் என்று சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாங்க.

இரண்டு பெரும் சினிமாவில் இருக்கிறீர்கள் எனவே மாறி மாறி இப்படி பேசி கொள்வது சரியாக இருக்காது 20 வருடங்கள் போகட்டும். யார் நல்லவர் என்று மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று தனக்கு அட்வைஸ் கொடுத்ததாக தெரிவித்து இருந்தார். ஆனால் சிவகுமார் அப்படி சொல்லியும் ஞானவேல் ராஜா அமீரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Join our channel google news Youtube