விரைவில் ‘தமிழகவெற்றிக்கழகம்’ உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டர். இதனையடுத்து,  தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக   தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த 19-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு… த.வெ.க. தலைமை அதிரடி உத்தரவு!

மேலும் அந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்து, நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டும் இருந்தார். இது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள்
வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், அந்த உறுப்பினர் சேர்க்கைக்கென செயலி மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம் எனவும்  உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment