கள்ளக்குறிச்சி விவகாரம்: ‘அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்’..! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

MK Stalin [file image]

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை தற்போது  ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலருக்கும் நேற்று இரவு முதல் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களை அப்போது கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, இன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கொண்டே இருந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்தார்கள் என தவறான தகவலை பரப்புகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறி இருந்தார்.

அதன் பின் உயிரிழப்பும் அதிகரிக்க தொடங்கியது, இதனால் சற்று முன்பு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டதுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

மேலும், தற்போது கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேற்கொண்டு 40-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து ‘இந்த வழக்கு விசாரணையையும் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் அவரது க்ஸ் தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவர், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.