சட்டென்று குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இந்த வாரத்தின் மூன்றாம் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்தது

(11.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976க்கும், கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,372க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ. 75க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.75,000க்கும் விற்பனையாகிறது.

(10.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது, ரூ.43,040க்கும், ஒரு கிராம் ரூ.5,380க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து 75.50க்கும், கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.