குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று வரை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சற்று சரிந்துள்ளது.

சென்னையில் இன்று (03. 01. 2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 ரூபாய் குறைந்து ரூ.47,320க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் குறைந்து ரூ.5915க்கும் விற்பனையாகிறது. அதேபோல்,  ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.80க்கும் கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனையாகிறது.

நாளை பிரதமரை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி..!

சென்னையில் நேற்று (02. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து ரூ.80.30க்கும், கிலோ வெள்ளி ரூ.80,300க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.