#STSangamam: சிறப்பு ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.!

செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலை சென்னையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு – சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், ஏப்ரல் 17 முதல் 26ம் தேதி வரை |நடைபெறும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார், மதுரையில் இருந்து புறப்பட்டு, 288 பயணிகளுடன் குஜராத்தின் வேராவல் நகருக்கு செல்கிறது. தமிழ்நாட்டில் குடியேறிய சவுராஷ்டிரா வாசிகள் மதுரையிலிருந்து இந்த சிறப்பு ரயில் மூலம் சோமந்தத்தை அடைவார்கள். ஏப்ரல் 15-ம் தேதி முதல் 23ம் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் காலை 9 மணிக்கு சோமநாதபுரம் ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

சோமநாதபுரத்திற்கு வரும் சவுராஷ்டிரா வாசிகளுக்கு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி-ஷாப்பிங் திருவிழாவும், சோம்நாத் மகாதேவின் தரிசனம், ஒளி மற்றும் ஒலி காட்சி ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கபடி, கோ-கோ, கயிறு இழுத்தல், கைப்பந்து போன்ற வேடிக்கை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளும் சோம்நாத் கடற்கரையில் நடைபெற உள்ளன.

சௌராஷ்டிரா – தமிழ்ச் சங்கத்தில் பங்கேற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தத் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பயணம் குறித்து தெரிவிக்க, மாநில அரசின் கல்வி, தொழில், இளைஞர் செயல்பாடுகள் மற்றும் கலாச்சாரத் துறை கருப்பொருள் கருத்தரங்கை நடத்தப்படுகிறது.

Leave a Comment