இத எதிர்பார்க்கல ..!! ஜெமினி ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கூகுள்..!!

Gemini AI [file image]

ஜெமினி ஏஐ:  கூகுள் நிறுவனம் தற்போது ஜெமினி ஏஐ பயன்பாட்டை இந்தியாவில் புதிய ஆப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களை வித்தியாசமான ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கூகுள் நிறுவனம் தலை சிறந்த ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பானது  ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது.

நான்கு மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் ஜெமினி பயன்பாட்டை தனித்துவமான பயன்பாட்டாக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பயனர்கள் இந்த சேட்பாட்டை மேலும் எளிதாகப் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் சிஈஓ (CEO) ஆன சுந்தர் பிட்சை அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் கூறுகையில், “ஒரு சுவாரஸ்யமான செய்தி! இன்று நாங்கள் ஜெமினி மொபைல் ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம். இது ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கின்றது. மேலும், ஜெமினியின் அடுத்தநிலையாக செயலியில் இந்த உள்ளூர் மொழிகளை இதில் சேர்த்திருக்கிறோம். மேலும், புதிய அம்சங்களுடன், ஜெமினியை கூகுள் மெசேஜஸில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துகின்றோம்” என்று பதிவிட்டிருந்தார்.

கூகுள் கொண்டு வந்துள்ள இந்த புதிய பயன்பாடு இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பயனர்கள் கருதிகின்றனர். மேலும், இந்த பயன்பாடு எளிதில் நமக்கு புரியும் வண்ணம் நமது உள்ளூர் மொழிகளிலே பயன்படுத்த முடிவதனால் இது எளிய மக்களுக்கும் பல விதத்தில் உதவியாக அமையும் என ஜெமினி பயனர்கள் கூறியுள்ளனர்.

சிறப்பம்சங்கள் :

  • கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஜெமினி ஏஐ மூலம், நமது போனில் ஏற்கனவே இருக்கும் ‘கூகுள் அசிஸ்டன்ட்’ நாம் பயன்படுத்தும் இடத்திற்கு பதிலாக ஜெமினி ஏஐ-யை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்.
  • ஜெமினி ஏஐ மூலம் பல்வேறு பணிகளைச் செய்ய முடியும். மேலும், இந்த ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மூலமோ அல்லது புகைப்படத்தை அனுப்பியோ நமது கேள்விகளை அதனிடம் கேட்டுக்கொள்ள முடியும்.
  • மேலும், ஜெமினி அட்வான்ஸ்டு (Gemini  ) மூலம் நீண்ட ஆவணங்கள் (1,500 பக்கங்கள் வரை) மற்றும் மின்னஞ்சல்கள், வீடியோ போன்ற பரந்த அளவிலான தகவல்களைச் எளிதில் புரிந்து உங்களுக்கு விடையளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.