தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,608-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,608-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.4,451-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800-க்கும் விற்பனையாகிறது.