தீபாவளியை முன்னிட்டு தங்கம் விலை தொடர் சரிவு! இன்றைய நிலவரம்…

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களாக பங்குச்சந்தை ஆனது சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் விலையில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், தீபாவளி நெருங்கும் நேரம் என்பதால் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலை மோதுகிறது. அதுபோல், வார தொடக்க நாளான நேற்றும், இன்றும் தங்கம் விலை சரிந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் (07.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு குறைந்து ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ.800 குறைந்து ரூ.77,500க்கும் விற்பனையாகிறது.

(06.11.2023) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 45,600 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும், வெள்ளி விலை கிராமிற்கு 20 காசு உயர்ந்து ரூ.78.20-க்கும் கிலோவுக்கு ரூ.78.2000 ஆக விற்பனை செய்யப்பட்டது.