தொடர் உச்சம் காணும் தங்கம் விலை…சவரனுக்கு ரூ.120 உயர்வு!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், டிசம்பர் 13ஆம் தேதி ரூ.5,700ஆக இருந்த ஒரு கிராம் தங்கம் 2 வாரங்களில் ரூ.195 உயர்ந்திருக்கிறது. இன்று மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருக்கிறது.

சென்னையில் இன்று (26. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.47,160 என விற்பனை ஆகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,895 என விற்கப்படுகிறது. அதே வேலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ ரூ.81,000 என்று விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் நேற்று (25. 12. 2023) 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,880-க்கும் சவரனுக்கு ரூ 47.040ஆக விற்பனை ஆனது. அதே போல்,வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.80,700 என்று விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.