தங்கம் விலை சரிந்தது..! சவரனுக்கு ரூ.80 குறைந்தது..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை:

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.10 குறைந்து  ரூ.5,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை :

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.80,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment