Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ..! எவ்வளவு தெரியுமா ..?

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :- அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் (01.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.76.20-க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.76,200-க்கும் விற்பனையாகிறது.

Read More :- முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.!

சென்னையில் (29. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை  30 காசுகள் உயர்ந்து ரூ.75.70-க்கும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.75,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment