உடனே போங்க…! தங்க விலை சரிவு…சவரனுக்கு ரூ.560 குறைவு!

தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாங்கும் இல்ல தரிசகள் சந்தோஷத்தில் உள்ளனர்.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.81,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை சரிந்தது, அன்று முதல் இன்று வரை அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment