ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்து – 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. RJ ஷாப்பிங் மால் கட்டிடத்தில் காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பல இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என கணிக்கப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம்.. பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ் – இஸ்ரேல்.!

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதலில் காலை 7 மணியளவில் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் வணிக வளாகத்தின் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்களுக்கும் பரவியது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார். கராச்சி துணை கமிஷனர் சலீம் ராஜ்புத் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.