அதிரிச்சியில் ரசிகர்கள்..!! கால்பந்து வீரர் மதிஜா சார்கிச் காலமானார்!!

Matija Sarkic [file image]

மதிஜா சார்கிச் : கால்பந்து வீரரான கோல் கீப்பராக விளையாடி வரும் மதிஜா சார்கிச் உடல்நல குறைவால் காலமானார்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் மாண்டினீக்ரோ தேசிய அணிக்காக விளையாடி வந்தவர் ஆவார். மேலும், EFL சாம்பியன்ஷிப் மில்வால்க்கு கிளப்பிற்காக கோல்கீப்பராக விளையாடுகிறார். மேலும், ஓவர் ஆஸ்தான வில்லா கிளப்பிற்காகவும் விளையாடி வருகிறார். இவர் இன்று அவரது 26 வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்திருக்கிறார்.

புட்வா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் வாழ்ந்து வந்த இவர் தீடிரென நோய்வாய் பட்டுள்ளார். அது தீவிரமானதும், அவரது நண்பர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்தது சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக காலை 6:30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இவரது இந்த உயிரிழப்பானது அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் மில்வால் கிளப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இந்த இழப்பிற்கு அவர் விளையாடிய கிளப்புகளும், அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.