பிரபல மூத்த பத்திரிகையாளர் ஹர்பால்சிங் பேடி காலமானார்..!

Harpalsingh bedi [file image]

ஹர்பால்சிங் பேடி: பிரபல மூத்த விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஹர்பால் சிங் பேடி டெல்லியில் காலமானார்.

விளையாட்டு பத்திரிகை துறையில் பிரபலமாய் இருந்த மூத்த பத்திரிகையாளரான ஹர்பால்சிங் பேடி அவரது 72 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட நாட்களாகவே உடல்நல கோளாறால் அவதி பட்டு வந்த நிலையில், இன்று டெல்லியில் காலமானார். இவரது இழப்பு பத்திரிகை துறையில் ஒரு

இந்திய விளையாட்டு பத்திரிகை துறையில் ஒரு உயர்ந்த நபரான பேடி 4 தலைமுறை மேலாக தனது வாழ்க்கையைப் பத்திரிகை துறைக்கே அர்பணித்துள்ளார். அவர் யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியாவுக்காக (UNI) எட்டு ஒலிம்பிக் விளையாட்டுகள், பல ஆசிய விளையாட்டுகள், கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் ஹாக்கி உலகக் கோப்பை உட்பட பல விளையாட்டுகளை தொகுத்துள்ளார்.

அதன்பின் 2012 ம் ஆண்டு தேசிய ஒலிம்பிக் குழுவின் பத்திரிகை இணைப்பாளராகவும் பணியாற்றினார். பல இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். பேடியின் விளையாட்டின் மீதான ஆர்வம் அவரை அனைத்து விளையாட்டிலும் கூர்ந்து கவனிக்க வைத்தது. மேலும், இந்திய ஹாக்கி அணியின் தீவிர ரசிகராகவும் இருந்தார்.

தற்போது, அவரது மறைவைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையினர், பத்திரிகை துறையினர் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.