வார இறுதியில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold rate [file image]

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்த வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (15-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.53,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55 அதிகரித்து ரூ.6,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து, ரூ.95.60க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (14-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,650க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் ரூ.53,280க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், நேற்று ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.95க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.