Thursday, November 30, 2023
Homeசினிமாகழுகு சீன் ரஜினியை தாக்கி எடுக்கப்பட்டதா? உண்மையை உடைத்த 'லியோ' பட பிரபலம்!

கழுகு சீன் ரஜினியை தாக்கி எடுக்கப்பட்டதா? உண்மையை உடைத்த ‘லியோ’ பட பிரபலம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிழாவில் காகம் மற்றும் கழுகு கதை ஒன்றை பேசி இருந்தது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது என்றே கூறலாம். இசை வெளியீட்டு விழாவில் ‘காகம் மற்றும் கழுகு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கழுகு கீழே இருக்கும் போது காகம் அதனை தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் அளவிற்கு என்ன முயற்சி செய்தாலும் காகத்தால் பறக்கவே முடியாது” என தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விஜய்யை தாக்கி தான் ரஜினி இப்படி பேசி இருக்கிறார் என தகவலை பரப்பினார்கள். இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாக்கு வாதமும் நடந்தது. இதன் பிறகு லியோ படத்தில் நடிகர் விஜய் கடைசி காட்சியில் கழுகிடம் பேசுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ரஜினி ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசியதற்கு தான் விஜய் இந்த லியோ காட்சியின் மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறார் எனவும் கூறினார்கள். ஆனால், இது ரஜினி சாரை தாக்கி எடுத்த சீன்னு சொல்றது சுத்தமாக சம்மந்தமே இல்லாத ஒன்று என லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் பரமஹம்ஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பரமஹம்ஷா ” லியோ படத்தில் விஜய் கழுக்குடன் பேசும் காட்சியை நாங்கள் படமாக்கியது மே மாதம். ஆனால், ரஜினி சார் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ஜூலை மாதம்.எனவே ,அதுக்கும் – இதுக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. இது ரஜினி சாரை தாக்கி எடுத்த சீன்னு சொல்றது சிலரால் பரப்பப்பட்ட பொய் ” என கூறியுள்ளார்.

தலைவர் 171 படத்தை நீ தான் பண்ணனும்! ரஜினிக்காக ஒளிப்பதிவாளரிடம் கெஞ்சிய விஜய்!

பரமஹம்ஷா பேசியதை வைத்து பார்ப்பதன் மூலம் ரஜினிகாந்த் கழுகு கதை விஜய்யை தாக்கி பேசவில்லை என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி தலைவர் 171 படத்தின் கதையை கேட்டுவிட்டு தன்னிடம் இந்த படத்தில் நீ தான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டும் படத்தின் கதை அருமையாக இருப்பதாகவும் விஜய் கூறியதாக ஒளிப்பதிவாளர் பரமஹம்ஷா தெரிவித்துள்ளார்.