மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!

மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!

TMC MP Mahua Moitra

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, மக்களவையில் கேள்வி எழுப்பி தன்னிடம் லஞ்சம் பெற்றதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானி மக்களவைக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பாஜகவினர் நாடாளுமன்ற நன்னடத்தை குழுவிடம் முறையிட்டு இருந்தனர். இது தொடர்பாக, ஏற்கனவே நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் நன்னடத்தை குழு முன் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டனர்.

ED சம்மனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.! அரவிந்த் கெஜ்ரிவால்!

இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதியே நேரில் வந்து ஆஜராகும்படி மஹுவா மொய்த்ராவுக்கு நன்னடத்தை குழு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தனது தொகுதியில் வேலை இருப்பதாக கூறி வேறு தேதியில் ஆஜராகும் படி கோரி இருந்தார். அதன்படி, இன்று நவம்பர் 2ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, இன்று நாடாளுமன்ற நன்னடத்தை குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் நன்னடத்தை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவையில் பிரதமர் மோடி, அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்க்கு லஞ்சம், பரிசு பொருட்களை தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது மக்களவை எம்பிக்கான மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை மஹுவா மொய்த்ரா பகிர்ந்து கொண்டார். என்றும், அதன் மூலம் தான் அதானிக்கு எதிரான கேள்விகளை பெற்றார் என்றும், 15 முறை சபாநாயகரிடம் தெரிவிக்காமல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த புகார்கள் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று மஹுவா மொய்த்ரா கோரிக்கை வைத்து வருகிறார் .

Join our channel google news Youtube