கோலாகலமாக தொடங்கிய ‘சித்திரை திருவிழா’… மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குவிந்த பக்தர்கள்.!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.

புகழ்பெற்ற கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை போலவே மதுரை சித்திரை திருவிழாவும் உலகளவில் மிகவும் பிரபலமானது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். வருடம் தோறும் இந்த சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த வருடம் 2023 (இன்று) ஏப்ரல் 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 08 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது மதுரை மாவட்டம் கம்பத்தடி மண்டபத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளினர். மேலும், கம்பத்தடி மண்டபம் முழுவதும் நறுமணப் மிக்க பூக்களால் அலங்கரிப்பட்ட நிலையில், இதனை பார்த்த பக்தர்கள் அனைவரும்  மகிழ்ச்சி அடைந்தனர்.

முன்னதாக கொடிமரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் நிகழ்வு தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment