ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய நிலவரம் இதோ!

ஆடி மாதத்தில் ஆடி 18ம் நாள் மங்களத்தைப் பெருக்கித் தரக்கூடிய அற்புத நாள். இன்று பொதுமக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, குல தெய்வம், கோவில் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால் அது இரட்டிப்பாகும் என்று ஐதீகம்.

இந்த சமயத்தில், தங்கம் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக உள்ளது.சென்னையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது

மேலும், வெள்ளியின் விலை ரூ.1.80 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,400-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்பட்டது.